வெள்ளகோவிலில் புகையிலை விற்றவர் கைது

வெள்ளகோவிலில் புகையிலை விற்றவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கைது செய்தனர்;

Update: 2025-06-07 01:55 GMT
வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எம். சந்திரன் காங்கேயம் சாலையில் சந்தேகப்படும் இடங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை அருகில் உள்ள பேக்கரி பின்புறம் புகையிலை விற்று கொண்டிருந்த புதுக்கோட்டை ஆவுடையார் கோவில் பாரதி நகரை சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 29) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 12 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News