மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கிய அமைச்சர்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்களை அமைச்சர் வழங்கினார்;
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (ஜூன் .7) மாலை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் 286 பயனாளிகளுக்கு ரூ.2,91,14,800/- மதிப்பீட்டில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன், மேயர் இந்திராணி மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.