நெல்லை மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட காவல் நிலையங்கள்
தரம் உயர்த்தப்பட்ட காவல் நிலையம்;
தமிழ்நாடு முழுவதும் 280 காவல் நிலையங்களை சார்பு ஆய்வாளர் கட்டுப்பாட்டு நிலையிலிருந்து ஆய்வாளர் நிலைக்கு உயர்த்தி டிஜிபி சங்கர் ஜிவால் இன்று உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் சீவலப்பேரி, தேவர்குளம், சீதபற்பநல்லூர், மூலைக்கரைப்பட்டி, மூன்றடைப்பு, திருக்குறுங்குடி, பழவூர், ராதாபுரம், பாப்பாக்குடி, மணிமுத்தாறு, பத்தமடை, முக்கூடல் உள்ளிட்ட 12 காவல் நிலையங்கள் ஆய்வாளர் நிலையில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.