பல்வேறு திட்டப் பணிகளை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ க.சொ.க. கண்ணன் தொடங்கி வைத்தார்.

ஆண்டிமடம் ஒன்றியத்தில் சிமெண்ட் சாலை, ஏரி புணரமைப்பு, பள்ளிக்கு சுற்றுச் சுவர், கட்டிடப் பணி என பல்வேறு பணிகளுக்காக அடிக்கல் நாட்டியும், பணிகளை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ  தொடங்கி வைத்தார்;

Update: 2025-06-07 14:02 GMT
அரியலூர், ஜூன். 7- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட நாகம்பந்தல் ஊராட்சியில்,  2025-2025 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நாகம்பந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ 4.12 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியையும் சிறுபாசள குளங்கள் பேப்படுத்துப்  திட்டம் -2024-2025 -ன் கீழ் ,ரூ 4.40 லட்சம் மதிப்பீட்டில் லிங்காத்து ஏரியை புனரமைக்கும் பணியையும், பெரியகருக்கை ஊராட்சியில் -2025-2023 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்  கீழ், ரூ 5.69 லட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் தெரு இராஜமாணிக்கம் விடு முதல் மாரியம்மன் கோவில் வரை சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும்,  ரூ 9.23 லட்சம் மதிப்பீட்டில் இராங்கியம் ஊராட்சியில்,  இரா.வல்லம் மயானம் முதல் கீழ வல்லம் வரை மெட்டல் சாவை அமைக்கும் பணியையும், ரூ 6.60 லட்சம் மதிப்பீட்டில்  இராங்கியம் ஊராட்சியில்,  சிறுபாசன குளங்கள் மேம்படுத்தும் திட்டத்தில், பெரிய ஏரியை புனரமைக்கும்  பணியையும், ரூ 12.16 லட்சம் மதிப்பீட்டில் கவரப்பாளையம் ஊராட்சியில் தஞ்சாவூரான் சாவடி தாமரைக்குளம் முதல் வரதராஜன்பேட்டை இணைப்பு சாலை வரை மெட்டல் சாலை அமைக்கும் பணியையும், ரூ 5.79 லட்சம் மதிப்பீட்டில் சூரக்குழியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும். ரூ  7.05 லட்சம் மதிப்பீட்டில் அகரம் சாலை முதல் ரமேஷ் வீடு வரை சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், விளந்தை ஊராட்சியில் ரூ 10.25 லட்சம் மதிப்பீட்டில் கொளப்பாடி முதல் மயானம் வரை மெட்டல் சாலை அமைக்கும் பணியையும், சிறுபாசன குளங்கள் மேம்படுத்தும் திட்டத்தில் ரூ.12.00 லட்சம் மதிப்பீட்டில் தவசுக்குழி குமரகுளம் ஏரியை புனரமைக்கும் பணியையும்,  சிறுபாசன குளங்கள் மேம்படுத்தும் திட்டத்தில் ரூ.8.00 லட்சம் மதிப்பீட்டில், விளந்தை பெரிய ஏரியை புனரமைக்கும் பணியையும்,  ரூ 9.56 லட்சம் மதிப்பீட்டில் பெரியகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் ரெட்டி தத்துவூரில் சிவன் சாலை அமைக்கும் பணியையும், ரூ 7.10 லட்சம் மதிப்பீட்டில் ரெட்டிதத்தூர் மேலக்கட்டு பிள்ளையார் கோயில் முதல் தெற்கு இணைப்பு சாலை வரை சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், ரூ 7.19 லட்சம் மதிப்பீட்டில் பெரியகிருஷ்ணாபுரம் கிழக்குத் தெரு முதல் ஆதிதிராவிடர் மயானம் வரை மெட்டல் சாலை அமைக்கும் பணியையும், ரூ 8.70 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாசன குளங்கள் மேம்படுத்தும் திட்டத்தில் பெரிய தத்துவார். பெரிய ஏரியை பணிறமைக்கும் பணியையும், ரூ 8.00 லட்சம் மதிப்பீட்டில் பெரிய தத்தூர்  பரப்பனேரி புனரமைக்கும் பணியையும், ரூ 6.50 லட்சம் மதிப்பீட்டில் பெரியதத்தூர் சின்ன ஏரியை புனரமைக்கும் பணியையும், ரூ 2.18 லட்சம் மதிப்பீட்டில் திருக்களப்பூர் ஊராட்சியில் இரவாங்குடி பாஸ்கர் இடம் முதல்  நரசிங்கமங்கலம் வரை மெட்டல் சாலை அமைக்கும் பணியையும், ரூ 30.00 லட்சம் மதிப்பீட்டில் புதிய கிராம ஊராட்சி செயலகம் கட்டிடம் கட்டுமான பணியை தொடங்கி வைத்தும்,  ரூ 5.26 லட்சம் மதிப்பீட்டில் கோவில்வாழ்க்கை ஊராட்சியில் சாவடிக்குளம் தூர்வாருதல் மற்றும் ஆழப்படுத்தும் பணியையும்,          ரூ. 17.25 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணியை தொடங்கி வைத்தும்,      ரூ 4.75 லட்சம் மதிப்பீட்டில் கோவில் வாழ்க்கை நடுத்தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், ரூ 9.21 லட்சம் மதிப்பீட்டில் கோயில் வாழ்க்கையில் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணியையும், ரூ 4.09 லட்சம் மதிப்பீட்டில் கோவில் வாழ்க்கை ஆதிதிராவிடர் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியையும்,  ரூ 6.41 ரட்ச மதிப்பீட்டில் கோயில் வாழ்க்கை ஆதி திராவிடர் தெருவில் மெட்டல் சாலை அமைக்கும் பணியையும் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ க.சொ.க. கண்ணன் தொடங்கி வைத்தார்.

Similar News