பரமத்தி வேலூர் அருகே நள்ளிரவில் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.
.பரமத்திவேலூரை அடுத்துள்ள ஜேடர்பாளையம் ஆனங்கூர் அருகே வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு. ஜேடர்பாளையம் போலீசார் தீவிர விசாரணை.;
பரமத்தி வேலூர், ஜூன்.7: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள ஜேடர்பாளையம் அருகே ஆனங்கூர் காட்டுவலவு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு( 42). அதே பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி நிர்மலா, (பியூடிசியன்) . இவர்களுக்கு பிரீத்தி சன்சிகா என்ற 2 மகள்கள் உள்ளனர். நேற்று இரவு சேட்டு இரவு தூங்கிக் கொண்டிருந்தனர் .அப்போது நள்ளிரவில் மர்ம நபர்கள் சேட்டுவின் வீட்டின் கதவு மீது பெட்ரோல் குண்டை வீசி உள்ளனர் .அப்போது பெட்ரோல் குண்டு வெடித்ததில் அதி பயங்கர சத்ததுடன் தீ சுவையுடன் பரவியது கட்டு எழுந்து வந்து பார்த்தபோது கதவுக்கு கீழே கிடந்த செருப்புகள் ,தொங்கிக் கொண்டிருந்த திரரைச்சீலைகள், அங்கிருந்த சேர்கள் உள்ளிட்ட பொருட்களை தீப்பிடித்து எரிந்துள்ளது. தண்ணீரை எடுத்து ஊற்றி அனைத்தனர். இது குறித்து சேட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அடிப்படையில் ஜேடர்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் பரமத்திவேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கீதா, காவல் ஆய்வார் இந்திராணி மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தடைய அறிவியல் நிபுணர்கள் கைரேகை நிபுணர்கள் வந்திருந்து தடயங்களை சேகரித்து வருகின்றனர்.