இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து
எத்தலப்ப நாயக்கனூர் பிரிவு பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து;
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள எஸ். குரும்பபட்டியை சேர்ந்தவர் முருகன்( வயது 30) பெயிண்டர் இவர் சங்கங்கள் தனது வேலைகளை முடித்துவிட்டு திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அய்யலூர் அருகே எத்தலப்ப நாயக்கனூர் பிரிவு பகுதியில் கவனக்குறைவாக வாகனத்தை திருப்பி உள்ளார். இதில் திண்டுக்கல்லில் இருந்து திருச்சிக்கு திருமணத்திற்காக பெண் அழைப்பிற்கு புதுப்பெண்ணை கரூர் மாவட்டம் குளித்தலை பொய்யாமணி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 49) ஏற்றிச்சென்று கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற முருகன் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் தேசிய நெடுஞ்சாலை ஆம்புலன்ஸ் வாகன மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.