கோவை: டீ கடையில் கேஸ் சிலிண்டர் கசிவு: திடீர் தீ விபத்து !
கே.ஜி. தியேட்டர் எதிரிலுள்ள டீ கடையில் கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.;
கோவை மாநகரத்தில் உள்ள கே.ஜி. தியேட்டர் எதிரிலுள்ள டீ கடையில் நேற்று கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தீ விபத்து நிகழ்ந்த உடனேயே கடை ஊழியர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கினர். அதன்பேரில், உதவி ஆய்வாளர் கார்த்திக் தலைமையில் ஐந்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் காவல் நிலையத்தில் இருந்த தீயணைப்பு கருவிகளை கொண்டு வந்ததோடு, தீயை விரைவாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். தகவலறிந்த பந்தய சாலை காவல் ஆய்வாளர் கந்தசாமி, சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும், தீயணைப்பு துறைக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரின் சுறுசுறுப்பான நடவடிக்கையால் பெரும் உயிர் மற்றும் சொத்து சேதம் தவிர்க்கப்பட்டது. இதற்கு முந்தைய தீவிபத்து ஏற்படும் சற்றுமுன் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.