கோவை: விமான நிலையத்தில் கஞ்சா : பெண் கைது !
கோவை விமான நிலையத்தில், பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக வந்த விமானத்தில் கஞ்சா கொண்டு வந்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;
கோவை விமான நிலையத்தில் பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக வந்த விமானத்தில் பயணித்த பெண் ஒருவர், 3.155 கிலோ உயர்தர ஹைட்ரோபோனிக் கஞ்சாவை கடத்தியதாக நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க மற்றும் வான்வழி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையின் போது, அவரது பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருப்பதாக கூறப்படுகிறது. போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.