பாஜக தென்னாட்டை புறக்கணிக்கிறது – செல்வப் பெருந்தகை விமர்சனம் !

தமிழ்நாட்டின் உழைப்பை பாஜக அரசு உறிஞ்சி, வட மாநிலங்களுக்கு நிதி உதவி செய்கிறது என செல்வப் பெருந்தகை கடுமையாக விமர்சனம் செய்தார்.;

Update: 2025-06-08 03:54 GMT
கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய செல்வப் பெருந்தகை, பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். தமிழ்நாட்டின் உழைப்பை பாஜக அரசு உறிஞ்சி, வட மாநிலங்களுக்கு நிதி உதவி செய்யும் நிலையில், பள்ளிக்கல்விக்குத் தேவையான ரூ.2000 கோடியும் வழங்கப்படவில்லை என்றார். முருகன் மாநாடு பற்றி பேசும் போது, இது மக்கள் மீது பயம் கட்டும் அரசியல் முயற்சி எனக் கூறினார். இத்தகைய மாநாடுகள் சமத்துவத்தைப் போதிக்காது; முருகன் விழாவை வட மாநிலங்களில் நடத்தட்டும் என்றார். மறு சீரமைப்பு குறித்து, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்தத் திட்டமிடுவதாகத் தெரிவித்த அவர், இதனால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் என எச்சரிக்கை செய்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து, மத்திய அரசு உடனடியாக நடத்த வேண்டும் என்றும் தாமதம் ஏற்க முடியாது என்றும் கூறினார். ஐபிஎல் விழா விபத்து, அமித்ஷா வருகை, மத்திய அரசு – மாநில அரசு உறவுகள் உள்ளிட்ட பல விஷயங்களில் கருத்து தெரிவித்த அவர், தமிழ்நாட்டின் உரிமைகளை கேட்பது சண்டையல்ல, நியாயம் என்றும், மத்திய அமைச்சர் முருகன் தமிழ்நாட்டுக்காக குரல் கொடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

Similar News