வெட்டன்விடுதி, கணக்கன்காட்டைச் சேர்ந்த தர்மராஜ் (50), அவரது மனைவி அன்னலெட்சுமி (40) ஆகிய இருவரும் வெட்டன்விடுதியிலிருந்து கறம்பக்குடிக்கு பைக்கில் சென்றுள்ளனர். அப்போது, மயிலங்கோன்பட்டி கிளை சாலையில் அவருக்கு எதிரே காரை ஓட்டி வந்த வினோத் (40) மோதியதில் அன்னலெட்சுமிக்கு பலத்தகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர்கள் அளித்த புகாரில் கறம்பக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.