புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ரத்தினகோட்டையைச் சேர்ந்தவர் சீனிவாசன் (65). இவர் அறந்தாங்கி நயரா பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே பைக்கை ஓட்டி வந்த அய்யாவு (25) மோதியதில் சீனிவாசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரில் அறந்தாங்கி போலீசார் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.