கஞ்சா வழக்கில் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது

திண்டுக்கல்லில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது;

Update: 2025-06-08 06:40 GMT
திண்டுக்கல்லில் கஞ்சா கடத்திய வழக்கில் உசிலம்பட்டி கீரிப்பட்டி சேர்ந்த செல்லப்பாண்டி(36) என்பவரை திண்டுக்கல் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவரின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு எஸ்பி. மயில்வாகனன் பரிந்துரையின் பேரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் அவர்கள் செல்லப்பாண்டியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து திண்டுக்கல் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் செல்லப்பாண்டியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News