தளி அருகே மாந்தோப்பில் புகுந்து யானைகள் அட்டகாசம்.

தளி அருகே மாந்தோப்பில் புகுந்து யானைகள் அட்டகாசம்.;

Update: 2025-06-08 08:29 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் தளி அருகே உள்ள தாசிரப்பள்ளி கிராமத்திற்குள் 10க்கும் மேற்பட்ட யானைகள் புகுந்தன. அருகில் உள்ள சந்திராரெட்டி என்பவர் தோட்டத்தில் புகுந்து மாமரங்களை முறித்தும் காய்களை தின்றும் சேதப்படுத்தி சென்றுள்ளன. இதனிடையே நேற்று முன்தினம் காலை விவசாயிகள் தோட்டத்திற்கு சென்ற போது யானைகள் மரங்களை முறித்தும் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தற்போது மா அறுவடை தொடங்கியுள்ள நிலையில் யானைகள் மாங்காய்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

Similar News