ஆர் என்ற உலக நிறுவனமானது கல்வி சார்ந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து ஆண்டுதோறும் தரவரிசை பட்டியலை வெளியிட்டு அங்கீகரிக்கும் ஓர் முன்னணி அரசு சாரா நிறுவனம் ஆகும். இது இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு கற்றல் இலக்கு அடிப்படையில் சிறந்து விளங்கும் கல்லூரிகளை அங்கீகரித்துள்ளன. இதில் விநாயகா மிஷனின் சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி மற்றும் சென்னை பையனூர் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிக்கு பிளாட்டினம் தரவரிசை வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி யின் முதல்வர் செந்தில்குமார் கூறுகையில், மாணவர்களுக்கு தங்களின் துறை சார்ந்த திறனை மட்டும் மேம்படுத்துவதால் அவர்களின் வருங்கால வளர்ச்சியை ஈடுசெய்ய முடியாது. துறையுடன் தொடர்புடைய அனைத்து இதர பிரிவு திறன்களையும் மேம்படுத்தி பல்வேறு இதர பிரிவுகளிலும் வேலைவாய்ப்பினை பெறுவதற்கு வழிவகையாக எங்கள் கல்லூரிகளில் பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் கற்றல் மற்றும் கற்பித்தல் சார்ந்த செயல்பாடுகளை மையப்படுத்தி இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றார். இத்தகைய அங்கீகாரம் கிடைப்பதற்கு சிறந்த பங்களிப்பாற்றிய கல்லூரியின் முதல்வருக்கு, வேந்தர் கணேசன், அனுராதா கணேசன் மற்றும் துறை சார்ந்த பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.