சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து

ஒட்டன்சத்திரம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து... பழனி கோவிலுக்கு சென்று திரும்பிய 6 பக்தர்கள் காயம்;

Update: 2025-06-09 04:18 GMT
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே பழனி பக்தர்கள் வந்த சுற்றுலா வேனின் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் ஆறு பேர் படுகாயமடைந்தனர். மதுரை அண்ணா நகரை சேர்ந்த பக்தர்கள் பழனிக்கு சென்று திரும்பியபோது தேசிய நெடுஞ்சாலையில் சத்திரப்பட்டி பகுதியில் விபத்து நடந்துள்ளது. காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சத்திரப்பட்டி போலீசார், சாலை நடுவில் கவிழ்ந்த வேனை அப்புறப்படுத்தினர்.

Similar News