நுங்கு பறிக்க பனை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து பலி.

மதுரை திருமங்கலம் அருகே நுங்கு பறிக்க பனைமரத்தில் ஏறியவர் தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.;

Update: 2025-06-09 05:14 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் நடுவக்கோட்டை நடுத்தெருவை சேர்ந்த ராமனின் மகன் மொட்டையாண்டி( 32) என்பவர் நேற்று (ஜூன்.8) காலை 7 மணி அளவில் பனை மரத்தில் நுங்கு பறிப்பதற்காக ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மரத்திலிருந்து கீழே விழுந்ததில் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.இது குறித்து திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Similar News