கனமழை எச்சரிக்கை - கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் !
தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு வருகிற ஜூன் 13, 14, 15 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.;
தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு வருகிற ஜூன் 13, 14, 15 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்