ஊத்தங்கரையில் அரசு பஸ் மோதி குழந்தைகள் காயம்.
ஊத்தங்கரையில் அரசு பஸ் மோதி குழந்தைகள் காயம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மேட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் டூவீலரில் தனது மகள் மற்றும் மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அப்போது கோழி நாயக்கன்பட்டி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசு பஸ் டூவீலர் மீது மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு, படு காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த கல்லாவி போலீசார் வழக்கு பதிவு செய்ய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.