கரூரில், நூறாண்டுகளாக நடைபெற்று வரும் தட்டச்சு பணிகளை நிறுத்தக்கூடாது. மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட தட்டச்சு நிறுவன உரிமையாளர்கள்.

கரூரில், நூறாண்டுகளாக நடைபெற்று வரும் தட்டச்சு பணிகளை நிறுத்தக்கூடாது. மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட தட்டச்சு நிறுவன உரிமையாளர்கள்.;

Update: 2025-06-09 10:29 GMT
கரூரில், நூறாண்டுகளாக நடைபெற்று வரும் தட்டச்சு பணிகளை நிறுத்தக்கூடாது. மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட தட்டச்சு நிறுவன உரிமையாளர்கள். கடந்த நூறு ஆண்டு காலங்களில் தட்டச்சு செய்வது என்பது பொதுமக்களிடேயும் அரசு துறையிலும் நெருக்கமான உறவை பெற்றுள்ளது. நாகரிகத்தின் உச்சமாக கணினி செயல்பாடு வந்த போதும் அந்த கணினியை திறம்பட இயக்க தட்டச்சு பயிற்சி அவசியமாகிறது. அந்த வகையில் தட்டச்சு நிறுவன உரிமையாளர்கள் ஆங்காங்கே பயிற்சி கூடங்களை அமைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த பயிற்சியின் மூலம் அவர்களுக்கு அரசுத் துறையில் வேலை வாய்ப்பும்,தனிப்பட்ட முறையில் வேலைவாய்ப்பும் அவர்களுக்கு கிடைக்கிறது. இந்நிலையில் அண்மையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இனி வருங்காலங்களில் கணினி மூலமே தட்டச்சு தேர்வு நடத்தப்படும் என தெரிவித்ததால் , தட்டச்சு நிறுவனங்களை நடத்தி வரும் உரிமையாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இது தொடர்பாக தட்டச்சு உரிமையாளரான ராஜசேகரன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது, கடந்த நூறு ஆண்டுகளாக இருந்த நடைமுறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலம் திறமையான , தகுதியான நபர்கள் அரசு துறைக்கு கிடைப்பது சாத்தியமாகும். மேலும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடும். எனவே அரசு பரிசீலனை செய்து மீண்டும் தட்டச்சு செய்யும் முறையை கொண்டு வருவதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்ததாகவும் , தமிழக அரசு இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Similar News