செல்லாண்டியம்மன் கோவில் திருப்பணிக்கான பூமி பூஜை

மணலூர் செல்லாண்டியம்மன் கோவில் திருப்பணிக்கான பூமி பூஜை;

Update: 2025-06-09 12:13 GMT
மூலனூர் அருகே மணலூர் கிராமத்தில் அமைந்துள்ள செல்லாண்டியம்மன் கோவில் திருப்பணிக்கான பூமி பூஜை நடந்தது. கொங்கு வேளாளர் குலதெய்வங்களில் முக்கியத்துவம் பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் பல நூற்றாண்டு பழமை வாய்ந்ததாகும். கண்ணன் குலத்தவர்களின் வழிபாட்டுத் தலமான இக்கோவில் திருப்பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. கிராமமக்கள் மற்றும் கோவிலைச் சேர்ந்த காணியாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாபன், மூலனூர் பேரூராட்சி தலைவர் மக்கள் தண்டபாணி, கன்னிவாடி பேரூர் செயலாளர் சுரேஷ் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News