வீரமாத்தியம்மன் கோவில் திருவிழா
குமாரபாளையம் அருகே வீரமாத்தியம்மன் கோவில் திருவிழா நடந்தது.;
குமாரபாளையம் அருகே வீரமாத்தியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. ஏரளாமான பெண்கள், மஞ்சள் ஆடை அணிந்தவாறு தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்தனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், வீரமாத்தியம்மன் சர்வ அலங்காரங்களுடன் அருள்பாலித்தவாறு வந்தார். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களின் பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது. முளைப்பாரிகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும் சிலர் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற, கோவிலுக்கு, மணி, வேல், அம்மனுக்கு அலங்கார பொருட்கள், சேலைகள், தீபாராதனை தட்டு, உள்ளிட்ட பல பொருட்கள் வாங்கி கொடுத்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. மேளத்திற்கு ஏற்றவாறு, இளைஞர்கள் பலர் ஆடியது, காண்போரை கவர்ந்தது. இன்று மதியம் மறுபூஜை நடைபெறவுள்ளது.