பேருந்து நிலையத்தில் மது பிரியர்களால் பொதுமக்கள் அவதி

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் மது பிரியர்களால் பொதுமக்கள் அவதி;

Update: 2025-06-09 15:39 GMT
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் டூரிஸ்ட் கார் நிறுத்தும் இடத்தில் லாட்டரி டிக்கட் விற்கும் கடை அமைத்து, பகல் என்றும் பாராமல் கன ஜோராக லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. இங்கு பகல் நேரங்களில் டூரிஸ்ட் கார் ஓட்டுனர்கள் இருப்பதால், கார் நிறுத்தும் இடங்களில் வெளி ஆட்கள் யாரும் வருவது இல்லை. ஆனால் இரவு நேரங்களில் இந்த லாட்டரி சீட்டு கடைக்கு வரும் நபர்கள், மற்றும் இதர நபர்கள் கார் நிறுத்தி வைக்கப்பட்ட இடங்களின் பின்புறம், மற்றும் கார்களுக்கு இடையில் உள்ள இடங்களில் அமர்ந்துகொண்டு மது குடித்து வருகிறார்கள். குடித்து விட்டு, காரின் அடியில் காலி பாட்டில்களை போட்டு விட்டு செல்கிறார்கள். இதை கவனிக்காமல் காரை எடுக்கும் போது, பாட்டில்கள் கார் டயரில் சிக்கி உடைந்து, டயரை, டியூப்பை கிழிப்பதால், கார் ஓட்டுனர்கள், கார் உரிமையாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகிறார்கள். வாடகைக்கு கார் பேசிய நபர்கள், வெளியில் வேறு நபர்கள் வசம் வாடகைக்கு கார் பேசி சென்று விடுவதால், கார் ஓட்டுனர்கள், கார் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. லாட்டரி சீட்டு வாங்க வெளியில் இருந்து பல ஆட்கள் வருவதால், இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தவிர்க்க, பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இருக்கும் லாட்டரி சீட்டு கடையை அகற்றவேண்டும். போலீஸ் இரவு ரோந்து பணியின் போது, பஸ் ஸ்டாண்ட், கார் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் யாரவது உள்ளார்களா என, பார்த்து, அவ்வாறு இருந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Similar News