அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள், ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப கலெக்டரிடம் மனு

குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள், ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப கலெக்டரிடம் மனு;

Update: 2025-06-09 15:44 GMT
குமாரபாளையம் அரசு  மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் போதுமான வகுப்பறைகள், ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல், உள்ளிட்ட  வசதிகளை செய்து தர வேண்டி, மாவட்ட கலெக்டரிடம், பள்ளி மேலாண்மைக்குழுவினர் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. குமாரபாளையம் அரசு  மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சென்ற கல்வியாண்டில் (2024-25) 34 வகுப்பறைகள் இருந்தன. ஆனால் தற்போது 32 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. இந்த கல்வியாண்டில் (2025-26) 1,670 மாணவிகள் உள்ளதால், மேலும் புதிதாக 10 வகுப்பறைகள் தேவை உள்ளன. மேல்நிலை வகுப்பில், (11, 12ம் வகுப்புகள்) 556 மாணவியர் கல்வி பயில்கின்றனர். எனவே முதுநிலை ஆசிரியர்கள், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி பயிற்றுனர் தலா ஒரு பணியிடம் தேவைப்படுகிறது. மேலும் பொருளியல் பணியிடம் காலியாக உள்ளது. ஆகவே, அதற்கும்  ஆசிரியரை நியமித்து தருமாறும், 4 கழிப்பறைகள் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News