ஓசூர் அருகே சிப்ஸ் கடையில் புகுந்து- கவிழ்ந்த லாரி.
ஓசூர் அருகே சிப்ஸ் கடையில் புகுந்து- கவிழ்ந்த லாரி.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்- ராயக்கோட்டை சாலையில் லுக் இந்தியா கம்பெனி அருகே நேற்று சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த சிப்ஸ் கடை மீது மோதி கவிழ்ந்து. இந்த விபத்தில் கடை உரிமையாளர் அழகேசன் உயிர் தப்பினார். விபத்து குறித்து நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.