நெல்லை மாவட்டம் பத்தமடை அருகே உள்ள கரிசூழ்ந்த மங்கலம் தாமிரபரணி ஆற்றில் இருந்து தனியாக பாளையங்கால்வாய் பிரிகிறது. இந்த கால்வாயானது கோபாலசமுத்திரம், தருவை, பாளையங்கோட்டை வழியாக தூத்துக்குடி மாவட்டம் வரை செல்கிறது. சமீப நாட்களாக இந்த கால்வாயில் சாக்கடை அதிக அளவில் கலந்து கருப்பு நிறத்தில் காட்சியளிப்பதோடு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.