நெல்லை மாநகர சுத்தமல்லி வாழைக்காய் மாயாண்டி கோவிலில் கொடை விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன், மானூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கல்லூர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.