குமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் (39). கட்டிடத் தொழிலாளியான இவர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு ஷெமீரா (32) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சம்பவ தினம் காலை ஆல்வின் வேலைக்கு சென்று விட்டார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ஷெமீராவை காணவில்லை. இதையடுத்து உறவினர்கள் உட்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து ஆல்வின் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஷெமீராவை தேடி வருகின்றனர்.