குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குட்பட்ட கேரளபுரம் பகுதியை சேர்ந்த பாபு என்பவரது மகன் சக்திவேல் என்ற விஜய் (27) என்பவர் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த குற்றவாளி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க எஸ் பி ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அவரின் பரிந்துரையின் அடிப்படையில் கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுதரவின்படி குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் இன்று 10-ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.