குண்டர் தடுப்பு சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

நாகர்கோவில்;

Update: 2025-06-11 12:23 GMT
குமரி மாவட்டம் வடசேரி கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த மணிகண்டன் (40) என்பவர் மீது ஏராளமான கஞ்சா வழக்குகள் உள்ளன. இதனை அடுத்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அழகுமீனாவிற்கு எஸ். பி. ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று மணிகண்டனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அழகுமீனா உத்தரவிட்டார். இதனையடுத்து வடசேரி போலீசார் நேற்று நாகர்கோவில் கிளை சிறையில் இருந்து மணிகண்டனை பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர்.

Similar News