குமரி மாவட்டம் குழித்துறையிலிருந்து விளவங்கோடு பள்ளி முன்புறம் வழியாக அ தங்கோட்டிற்கு செல்லும் சாலை உள்ளது. தற்போது இந்த சாலையில் அலங்கார ஓடுகள் பதித்து சீரமைக்கும் பணி சுமார் ஒரு மாதத்திற்கு முன் துவங்கப்பட்டது. அதன்பின் அதன் பின் தொடர் மழையால் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதால், தற்போது விளவங்காடு கிராம அலுவலகம் முன்புறம் உள்ள சாலையில் வடிகால் பட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதனால் குழித்துறை சந்திப்பில் இருந்து அதங்கோடு செல்லும் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். 15 நாட்களில் பணிகள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.