காட்டில் கணவன் - மனைவி சடலம் - மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை
வெள்ளகோவில் அருகே ஆடு மேய்க்கும் காட்டில் கணவன் - மனைவி சடலம் - மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை ;
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள வெள்ளகோவில் சேனாபதி பாளையம் கிராமம் வேலப்பன்நாயக்கன் வலசு பகுதியில் வசித்து வருபவர் வேலுச்சாமி மற்றும் மனைவி சாமியாத்தாள் இவர்களுக்கு ஒரு மகள் அபிநயா (36) திருமணமாகி மதுரையில் வசித்து வருகிறார் மற்றும் மகன் வித்யாசாகர் (32) கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வேறு சமூகத்தைச் சார்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். மகன் திருமணம் முடிந்த பிறகு வேலுசாமி அடிக்கடி சாமியாத்தாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பச் சண்டை ஏற்பட்டு கோபமடைந்த வேலுச்சாமி மனைவி சாமியாத்தாளை பிரிந்து கடந்த இரண்டு மாதமாக சின்னதாராபுரம் அருகே அகிலாண்டபுரத்தில் தனியாக வசித்து வந்தார். உறவினர்களிடம் கூறி சுமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் ஆனால் வேலுசாமியை குடும்பத்துடன் சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை எனவும் இதனால் வேலுசாமி ஆத்திரத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை ஆடு மேய்க்க வீட்டின் அருகே உள்ள காட்டிற்கு சாமியாத்தல் சென்று உள்ளனர். ஆடு மேய்க்கச் சென்றவர் காலை உணவு அருந்த வீடு வரவில்லை என தொலைபேசியில் மகன் அழைத்துள்ளார் போன் எடுக்காததால் நேரில் சென்று அழைத்து வர காட்டிற்கு சென்று மகன் வித்யாசாகர் பார்த்த போது தாய் சாமியாத்தாள் மற்றும் தந்தை வேலுசாமி இருவரும் தலை, முகம் ஆகிய பகுதிகளில் கல்லால் அடித்த ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகன் வித்யாசாகர் வெள்ளகோவில் காவல் துறையினருக்கு தகவல் அறிந்து சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சாமியாத்தாள் கழுத்து பகுதியில் ஒரு வெட்டு காயம் இருந்தது. இருவரின் வாயிலும் தென்ன மரத்திற்கு பயன்படுத்தக்கூடிய கொடிய விஷம் கொண்ட செல்பாஸ் மாத்திரை வாயில் இருப்பதையும் சடலத்தின் அருகே அதன் பாட்டிலும், கருக்கருவாலும் இருந்துள்ளது. மேலும் வேலுசாமியின் இருசக்கர வாகனம் சுமார் 1 கிலோமீட்டர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு வந்த வேலுச்சாமி சாமியாத்தாளை அடித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.