கோவை: ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மூன்றாவது நாளாக போராட்டம்

கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2025-06-12 05:11 GMT
கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2021-ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் வாக்குறுதிக்கேற்ப, ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்பது அவர்களது முக்கிய கோரிக்கையாகும். மேலும், ஊதியம் நேரடியாக வழங்கப்பட வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், PF மற்றும் ESI கார்டுகள் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி ரூ.770 வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்த நிலையில், தற்போது ரூ.540 மட்டுமே வழங்கப்படுவதாகவும், இது குறித்து பதிலளிக்கக் கேட்டால் அதிகாரிகள் மௌனம் சாதிப்பதாகவும் பணியாளர்கள் குற்றம்சாட்டினர். போராட்டம் நடந்த இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News