பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் திருத்தங்கள் -தேர்வுத் துறை இறுதி வாய்ப்பு!

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் திருத்தங்கள் செய்ய தேர்வுத் துறை இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.;

Update: 2025-06-12 06:08 GMT
வேலூர் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் மாணவர்களின் விவரங்களில் திருத்தங்களை மேற்கொள்ள இறுதியாக ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட தேர்வுத் துறை அலுவலகத்தில் ஜூன் 13-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அரசு தேர்வுத் துறை இயக்குநர் ந.லதா, வேலூர் முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவித்துள்ளார்.

Similar News