புற்றுநோயை கண்டறியும் முகாமை தூக்கி வைத்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
புற்றுநோயை கண்டறியும் முகாமை தூக்கி வைத்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.;
புற்றுநோயை கண்டறியும் முகாமை தூக்கி வைத்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. கரூர் மாவட்டம், வாங்கல் அரசு மருத்துவமனையில் சமுதாய அளவிலான புற்றுநோயை கண்டறியும் முகாமை தொடங்கி வைக்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முகாமை துவக்கி வைத்தார். தமிழகம் முழுதும் 12 மாவட்டங்களில் ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் புற்றுநோயை கண்டறியும் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், கரூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள், 30 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கும் இந்த புற்றுநோய் கண்டறியப்படும் முகம் நடத்தப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் 82,000 பேருக்கு இந்த புற்றுநோய் கண்டறியும் முகாம் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் அரசு துறை மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.