குழந்தை தொழிலாளர் ஒழிப்பு:வாகன விழிப்புணர்வு பிரச்சாரம்
கலெக்டர் துவக்கினார்;
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தொழிலாளர்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, தலைமையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை, மாநில குழந்தை தொழிலாளர் கண்காணிப்பு பிரிவு சார்பில் நடைபெறும் விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். உணவு நிறுவனங்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள். பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணிகளில் அமர்த்துவதோ, வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதோ கூடாது என தெரிவிக்கப்பட்டது. நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர், தொழிலாளர்துறை உதவி ஆணையர் ராஜகுமார், தொழிலாளர்துறை ஆய்வாளர்கள் ஆறுமுகம், மணிமுருகன், பாலசுப்பிரமணியம், அஸ்வினி மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.