குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கடந்த மே மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசு குற்ற வழக்கறிஞர்கள் மற்றும் போலீசாரை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கடந்த மே மாதத்தில், விரைவான குற்றப் பத்திரிகை தாக்கல், குற்றவாளிகளை கைது செய்தல், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் மீதான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருதல் என ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையமாக இரணியல் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கேடயம் வழங்கினார். அதனை குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம் , இரணியல் காவல் ஆய்வாளர் செந்தில்வேல் குமார், உதவிய ஆய்வாளர்கள் முத்துகிருஷ்ணன், மகேந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.