திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே மறியலில் ஈடுபட்ட பேருந்து பயணிகள்
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே மறியலில் ஈடுபட்ட பேருந்து பயணிகள்;
பழைய பலவீனமான பேருந்தில் கூடுதல் பயணிகளுடன் பயணித்த போது திடீரென பேருந்து சாய்ந்ததால் மற்ற பயணிகள் கூச்சலிட்டதால் உடனடியாக நடுவழியில் நிறுத்தப்பட்டது ஆத்திரமடைந்த பேருந்து பயணிகள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. திருவள்ளூரில் இருந்து பெண்ணாலூர் பேட்டை செல்லும் T41 அரசு பேருந்து (மகளிர் இலவச பேருந்து ) பேருந்து பயணிகள் அதிக அளவு ஏறியதால் பேருந்தின் கட்டுமானம் பலவீனமாக இருந்ததால் ஒரு பக்கமாக சாய்ந்தது இதனால் அலறி அடித்த மற்ற பயணிகள் ஆட்சியர் அலுவலகம் அருகே பேருந்து நிறுத்தி மாற்று பேருந்து விட வேண்டும் என அவர்களுக்கு சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர் இது குறித்து தகவல் அறிந்து வந்த திருவள்ளூர் தாலுகா காவல்துறையினர் மற்றும் எஸ்பி சிறப்பு படை போலீசார் பேருந்து பயணிகளிடம் சமரசம் மேற்கொண்டு மறியலில் ஈடுபட்டவர்களை மீண்டும் பேருந்தில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்தனர்