பட்டா நிலங்களை அளந்த அரசாங்கம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உரிமையாளர்கள்

திருவள்ளூர் அடுத்த அரண்வாயில் பகுதியில் 2007 ஆம் ஆண்டு 62 நபர்களுக்கு ஆதிதிராவிடர் மக்களுக்காக இரண்டே கால் சென்ட் இடம் தமிழக அரசால் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.;

Update: 2025-06-12 12:09 GMT
திருவள்ளூர் அடுத்த அரண்வாயில் பகுதியில் 2007 ஆம் ஆண்டு 62 நபர்களுக்கு ஆதிதிராவிடர் மக்களுக்காக இரண்டே கால் சென்ட் இடம் தமிழக அரசால் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. தற்போது அப்பகுதியில் நீண்ட நாட்களாக வீடுகள் கட்டாமல் நிலமாக இருப்பதால் அந்த நிலத்தை பிரித்து 120 நபருக்கு பட்டா வழங்க உள்ளதால் திருவள்ளூர் வட்டாட்சியர் ரஜினிகாந்த் தலைமையில் வருவாய் அலுவலர் கிராம நல அலுவலர்கள் காவல்துறையினர் நிலத்தை அலப்பதற்காக வந்தபோது ஏற்கனவே பட்டா வாங்கிய நபர்கள் எங்கள் நிலத்தை தர மாட்டோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர் திருவள்ளூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.ஜெயசீலன். நிர்வாகிகள், ஜனார்த்தனன், பாபு, புட்லூர் லாசர், பொது மக்களிடம் சமரச வார்த்தை பேசி உள்ளத்தை உங்களுக்கு வாங்கி தருவதாக உறுதி அளித்ததால் பொதுமக்கள் பிரிந்து சென்றனர் இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News