லாரி மீது மோதிய ஆந்திரா பேருந்து பயணிகள் படுகாயம்
மாதவாரம் கொல்கத்தா நெடுஞ்சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி லாரி மீது மோதிய ஆந்திரா அரசு பேருந்து. பயணிகள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம்.;
மாதவாரம் கொல்கத்தா நெடுஞ்சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி லாரி மீது மோதிய ஆந்திரா அரசு பேருந்து. பயணிகள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் சென்னை மாதவரம் ரவுண்டானா மாடி பேருந்து நிலையத்திலிருந்து திருப்பதி செல்லக்கூடிய ஆந்திரா மாநில அரசு பேருந்து காலை 10:30 மணியளவில் புறப்பட்டது . இதனை ஓட்டுநர் மதுசூதன ராவ் இயக்கி ஓட்டி சென்று கொண்டிருந்தார். இந்த பேருந்தில் சுமார் 30 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த நிலையில், மாதவரத்திலிருந்து செங்குன்றம் செல்லும் கொல்கத்தா நெடுஞ்சாலையில் மதுரவாயில் மேம்பாலத்தின் கீழ் சாலையின் ஓரமாக குவிந்துள்ள மணல் , குப்பைகளை அகற்றுவதற்காக சென்னை மாநகராட்சி லாரி ஒன்று தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், முன்னாள் நின்று கொண்டிருந்த மாநகராட்சி லாரியை கவனிக்காமல் ஒட்டிய ஆந்திரா அரசு பேருந்து லாரியின் பின்னால் வந்து மோதியதில் பேருந்து கண்ணாடிகள் இன்ஜின் பகுதியில் முன்பக்கம் பலத்த சேதம் ஏற்பட்டு பேருந்து ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட அருகில் உள்ளோர் உடனே அவசர ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர் அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ்சில் ஓட்டுநர் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் மேலும் இந்த பேருந்தில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாதவரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுடலைமணி உதவி ஆய்வாளர் அய்யனார் உட்பட போலீசார் உடனே பேருந்தின் உள்ளே இருந்தவர்களை காப்பாற்றி அவசர ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அரசு மருத்துவமனையில் யார் யார் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக காலை நேரம் என்பதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது .அங்கு போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.