பாஜக கூட்டணி யாருடன் இணையும் என கேல்வியாக உள்ளது

பாஜக அதிமுக கூட்டணி யார் யாருடன் இருக்க விரும்புகிறார்கள் என்பது இன்னும் யாருக்கும் சரியாக விளங்காத புதிராக இருக்கும்போது திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி பாஜக கூட்டணியில் இணைவதாக சொல்வது மிகப்பெரிய காமெடியாக உள்ளதாக - எம்பி சசிகாந்த் செந்தில் விமர்சித்துள்ளார்;

Update: 2025-06-12 12:35 GMT
திருவள்ளூர்- பாஜக அதிமுக கூட்டணி யார் யாருடன் இருக்க விரும்புகிறார்கள் என்பது இன்னும் யாருக்கும் சரியாக விளங்காத புதிராக இருக்கும்போது திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி பாஜக கூட்டணியில் இணைவதாக சொல்வது மிகப்பெரிய காமெடியாக உள்ளதாக - எம்பி சசிகாந்த் செந்தில் விமர்சித்துள்ளார், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினராக ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெறும் என அமித்ஷா சொல்லி இருப்பது சிரிக்கத் தக்க விஷயம் என்றும் அரசியல் ரீதியாக தமிழகத்தை பிடிக்க முடியாததால் தமிழகத்திற்கு அடிக்கடி பாஜக தலைவர்கள் வந்து செல்வதாகவும் மூச்சுக்கு 300 தடவை காசியில் தமிழ் சங்கமும் செய்கிறோம் சொல்லும் அவர்கள் கீழடி அகழ்வாராய்ச்சி மூலமாக கண்டெடுக்கப்பட்ட தமிழ் மொழி ஒரு தொன்மையான மொழி என தர்க்க ரீதியாக காட்டும்போது அதை அங்கீகாரம் செய்யாமல் ஏளனம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார், குழந்தைகள் கல்வியில் எந்த அரசாங்கமும் விளையாடியது கிடையாது, ஆனால் பாஜக அரசு தேசிய கல்விக் கொள்கை ஏற்றால் மட்டும் தான் RTE போன்ற நிதியை விடுவிக்க முடியும் கூறி வருவதாகவும் பாஜக அரசு நாட்டை ஆளும் மன்னர் பரம்பரையாக அவர்கள் நினைத்து வருவதாகவும் அவர் கூறினார், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாட்டில் செய்ய முடியாதவை ஒன்று என்றும் பெகல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்தியா மோடி அரசு போர் தொடுத்தது ஒரு ட்ராமா என அவர் கூறினார் தமிழக மக்களுக்கு அரசியல் தெளிவு இருப்பதால் முருகன் பக்தர்கள் மாநாடு நடத்துவதன் மூலம் மக்களை மத ரீதியாக பாஜக எப்போதுமே உடைக்க முடியாது என்றார்

Similar News