அய்யம்பாளையம் அருகே ஆட்டோவை வேகமாக இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கல்லில் மோதி விபத்து கணவன் மனைவி படுகாயம்.
அய்யம்பாளையம் அருகே ஆட்டோவை வேகமாக இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கல்லில் மோதி விபத்து கணவன் மனைவி படுகாயம்.;
அய்யம்பாளையம் அருகே ஆட்டோவை வேகமாக இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கல்லில் மோதி விபத்து கணவன் மனைவி படுகாயம். கரூர் அடுத்த வெங்கமேடு, சேலம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 49. இவரது மனைவி கோமதி வயது 39. இவர்கள் இருவரும் இவர்களுக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவில் ஜூன் 10-ம் தேதி காலை 10:30 மணி அளவில் பாளையத்திலிருந்து கரூர் செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தனர். இவரது சரக்கு வாகனம் அய்யம்பாளையம் அருகே வந்தபோது வாகனத்தை வேகமாக இயக்கியதால், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கல்லில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கணவன் மனைவி இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டதால் , உடனடியாக அவர்களை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் அறிந்த பழனிச்சாமியின் உறவினர் குமார் வயது 31 என்பவர் அளித்த புகாரில் , சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , சரக்கு வாகனத்தை வேகமாகவும் , அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.