என்னைக்குள்ளாய் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

கோவை மாவட்டம் இருகூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரையில் விவசாய நிலங்களில் பாரத் பெட்ரோலியத்தின் எண்ணெய் குழாய் பதிப்பதற்கு  விவசாயிகள் எதிர்ப்பு . 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கோவை - கரூர் எண்ணெய் திட்டத்தை சாலை ஓரமாக அமைக்க கோரி அவினாசிபாளையத்தில் காத்திருப்பு போராட்டம்;

Update: 2025-06-12 15:10 GMT
பாரத் பெட்ரோலிய நிறுவனம் கேரளா மாநிலம் கொச்சி முதல் கர்நாடகா மாநிலம் தேவனஹந்தி வரை குழாய் மூலம் எரிபொருள் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை மாவட்டம் இருகூர் வரையிலும்,திருப்பூர் மாவட்டம் முத்தூரில் இருந்து கர்நாடகா வரை சாலையோரம் கொண்டு செல்லப்படுகிறது.ஆனால் கோவை திருப்பூர் மாவட்டங்களில்  70 கி.மீ வரை விவசாய விளை நிலங்கள் வழியாக கொண்டு செல்லப்படுகிறது.குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 60 கி.மீ வருகின்றது.கோவை மாவட்டம் இருகூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் வழியாக முத்தூர் வரை எண்ணெய் குழாய் பதிப்பதற்கான திட்டத்திற்கு கோவை மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த நிலையில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.தங்களது விவசாய நிலம் பாதிக்கப்படும் எனவும், நிலத்தின் மதிப்பு வெகுவாக சரியும் எனவும், எண்ணெய் குழாய்களை விவசாய நிலங்களில் பதித்தால் விளைச்சல் பாதிப்பு ஏற்படும் எனவும், அவசர கதியில் திட்டத்தை பாரத் பெட்ரோலிய நிறுவனம் நிறைவேற்றி வருவதால் எப்போது வேண்டுமானாலும் குழாய் வெடிக்கும் அபாயம் உள்ளதாகவும் எனவே திட்டத்தை சாலையோரமாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்திற்குட்பட்ட கோடங்கிபாளையம், சுக்கம்பாளையம், மாணிக்காபுரம், கணபதி பாளையம், உகாயனூர் வழியாக முத்தூர் வரை குழாய் அமைக்கப்பட உள்ளது. திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 200 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.200 நாட்களுக்கும் மேலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அவினாசிபாளையத்தில் ஒன்றினைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இத்திட்டத்தை சாலையோரமாக அமைக்காத மத்திய மாநில அரசை கண்டித்து மூன்றாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News