குமரி தந்தை என போற்றப்படும் மார்ஷல் நேசமணி 131-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்திலுள்ள திருவுருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் என்.சுரேஷ் ராஜன், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.