குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு
அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி;
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த இருதினங்களாக சாரல்மழை பெய்து வருகிறது. பேரருவியில் தண்ணீா்அதிகமாக விழுவதால் அருவியின் மையப்பகுதிக்கு யாரும் செல்லாதவாறு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனா். ஐந்தருவியில் ஐந்துகிளைகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. பழையகுற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் அதிகமாக விழுந்தாலும் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். நேற்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது சாரல்மழையும்,குளிா்ந்த காற்றும் நிலவியது. சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவாக இருந்தது.