மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்பட்ட குதிரை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து.

மாதப்பூர் அருகே மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்பட்ட குதிரை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து. சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு.;

Update: 2025-06-13 01:01 GMT
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் பொங்கலூரிலிருந்து பல்லடம் செல்ல கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியே தனது இருசக்கர வாகனத்தில் நேற்று சென்று கொண்டிருந்தார்.அப்போது அவர் மாதப்பூர் சுங்கச்சாவடியை கடக்க முயன்ற போது அப்பகுதியில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த குதிரை ஒன்று எதிர் பாராத விதமாக நெடுஞ்சாலைக்கு ஓடி வந்துள்ளது.மேலும் நந்தகுமார் இயக்கி வந்த இருசக்கர வாகனத்தின் மீது அந்த குதிரை மோதியதில் குதிரை பல்டி அடித்து சாலையில் விழுந்தது.மேலும் இருசக்கர வாகனத்தை இயக்கி வந்த நந்தகுமார் அதிர்ஷ்ட வசமாக சிறு காயத்துடன் உயிர் தப்பினார்.இதனிடையே இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றது.

Similar News