கலெக்டர் அறிவுறுத்தல்

அறிவுறுத்தல்;

Update: 2025-06-13 03:37 GMT
கள்ளக்குறிச்சி, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான செயல் திட்டம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான செயல்திட்டம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான விபத்துக் காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் மாணவ, மாணவியருக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.75 ஆயிரத்துக்கான காப்பீட்டு பத்திரங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, 'டைம் பார் சேஞ்ச்' எனும் தலைப்பில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான பயிற்சி புத்தகம் தயாரித்தல் பணிகளை மேற்கொண்ட, 41 ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. மேலும் மாணவர்களின் நிலையினை சரியாக அடையாளம் கண்டு, கற்பித்தல் முறைகளை தினமும் குறிப்பிட்ட நேரங்களில் மேற்கொண்டு, கற்றல் திறனை மேம்படுத்தவும், சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவும், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் சி.இ.ஓ., கார்த்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News