அரசு பேருந்து தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து
நாகவதி அணைக்கு செல்லும் அரசு பேருந்து தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து;
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகவதி அணைக்கு தர்மபுரி நகர பேருந்து நிலையத்திலிருந்து தினசரி 2 பி என்ற நகர பேருந்து இயக்கப்படுகிறது இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் சாமி செட்டிபட்டி பகுதியை அடுத்துள்ள நாகாவதி அணைக்கு செல்லும் பகுதியில் நல்லம்பள்ளியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநருக்கு படுகாயம் அடைந்துள்ளார் மேலும் பயணிகள் ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது விபத்து குறித்து அறிந்த தொப்பூர் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.