திருநெல்வேலி மாவட்டம் கொடுமுடியாறு அணையில் இருந்து இன்று கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் சபாநாயகர் அப்பாவு மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தனர். இதன் மூலம் நாங்குநேரி மற்றும் வள்ளியூர் வட்டாரத்தில் 5781 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் என கருதப்படுகிறது.