கரூரில் உலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணிநடைபெற்றது.

கரூரில் உலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணிநடைபெற்றது.;

Update: 2025-06-13 08:31 GMT
கரூர் -உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர் உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறை சார்பில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொ) பி.ராஜா தலைமையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த பேரணியை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் திருமதி லோகநாயகி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மருத்துவமனையில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி காந்தி கிராமம் விளையாட்டு மைதானம் வரை சென்று மீண்டும் மருத்துவமனையில் நிறைவுற்றது. பேரணியில் மருத்துவ பேராசிரியர்கள், மாணவர்கள், குருதி கொடையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Similar News