அனுமதியின்றி உலா வரும் அறைபாடி வாகனங்கள்

திண்டுக்கல்லில் அனுமதியின்றி உலா வரும் அறைபாடி வாகனங்கள் - கண்டுகொள்ளாத திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து துறை;

Update: 2025-06-13 12:05 GMT
திண்டுக்கல் நகர் பகுதிகளில் அதிக அளவு அறைபாடி வாகனங்கள் செயல்படுகின்றன. இவற்றிற்கு அனுமதி இல்லை இவைகள் அதிவேகமாக செல்வதால் ஆங்காங்கே விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் விவாகனங்களில் நம்பர் பிளேட், வாகன சான்று, விபத்து காப்பீடு உள்ளிட்டவைகள் இல்லாததால் விபத்து ஏற்பட்டால் காப்பீட்டு கிடைக்காது. இதுகுறித்து திண்டுக்கல் போக்குவரத்து துறை கண்டுகொள்ளாமல் இருப்பதால் இந்த வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Similar News